//.. தொழிலதிபர்கள், மற்றும் பெரும் வர்த்தகர்களுக்கு
வராத கடன்களைக் கொடுத்து, மக்களின் தலையில்
மிளகாய் அரைக்கின்றன
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள். //
விஜய மல்லையா பெரிய யோக்கியர்; அவர் திறம்பட நடத்திய வியாபாரம் நஷ்டத்தில் வந்தது என்று சொல்லவில்லை.
வங்கிகள் கொடுக்கும் கடன்கள் குறித்து பொத்தாம்பொதுவான விமரிசனம் சரியா என்பதே என் கேள்வி.
கடன் கொடுப்பதற்கு ஒரு வழிமுறையைப் பின்பற்றி லாபம் வரும் என்ற வணிகத்திற்கே கடன் வழங்கப்படும்.
கடன் பெற்றவுடன் , நிர்வாக குறைப்பாட்டினாலோ சொல்லிய திட்டப்படி நடக்காததோ அல்லது பணத்தை வேறு வழியில் திசை திருப்பி விரயம் செய்வதோ அல்லது வேறு நிகழ்வுகலினாலோ (11 / 9 பிறகு சுற்றுலா பயணம் குறைந்து ஹோட்டல்கள் நஷ்டம் அடைந்தது போன்றது) நிறுவனம் நஷ்டம் அடைந்து கடன் வாராக் கடன் ஆகிவிடுவது கடன் கொடுக்கும் தொழிலில் ஒரு ரிஸ்க். ஒரு வங்கியின் பத்தாயிரம் கோடி கடன்களில், முன்னூறு கோடி கடன் வாராக்கடன்; அதாவது மூன்று சதவீதம். அதாவது தொண்ணூற்று ஏழு சதவீதம் சரிவரக் கொடுக்கப்பட்டு, பயன் படுத்தப்பட்டு, திருப்பி அடைக்கப்பட்டு வருகின்றன என்று பொருள். பெரும்பாலான அரசு உடைமை வங்கிகளுக்கு இரண்டில் இருந்து எட்டு சதவீதம் வரை வாராக்கடன்.
எனக்கு கா.மை. போன்றோ கண்பத் போன்றோ எழுத வராது. என் தாழ்மையான விண்ணப்பம்: Mismanagement , சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி diversion of funds , Corporate Governanace போன்ற காரணங்களால் கடன்கள் வாராக்கடன் ஆகிவிட்டால் "விஜய மாலய கூத்தடிக்க கடன் வழங்கி மக்கள் பணத்தை தொலைத்த அரசு வங்கிகள்" என்று எழுதவேண்டாம். கம்பனிகளுக்கு கொடுக்கும் கடன்களுக்கு வழிமுறைகள் உள்ளன; அவற்றை பின்பற்றியே கடன் வழங்கப்படுகிறது; சில கடன்கள் வழங்கப்படும் போது Risk factors அனைத்தையும் கவனிக்காமல் பிழைகள் நடப்பது உண்டு. ஆனால் அவை மிகக் குறைவே. வங்கித் தொழில் சும்மா இருந்து - 'வைப்புத் தொகையைப் பெற்றுக்கொண்டு, கடன் கொடுத்து வசூல் வசூலித்தால்' லாபம் ஈட்டும் தொழில் அல்ல. கடன் வசூல் ஆகாதது தான் பிரச்னை.
வங்கிகள், அரசு வங்கிகள், அரசின் தலையீடு, அரசு அதிகாரிகளின் பங்களிப்பு என்று பல விஷயங்களைப் பற்றி பதிவுகள் இடலாம். ஆனால் எனக்கு தொழில் எழுத்து அல்ல. படிப்பவர்களும் இல்லை. முயற்சிக்கிறேன்.