pl see http;//tamizhoviya.blogspot.com on caste-based census
11 may 2010
my comments
சாதி வாரி கணக்கெடுப்பு வேண்டாம் என சொல்வது "மிகப் பின் தங்கிய சாதிகள் " என்ற பெயரில் ஒதுக்கீடு அனுபவித்தவர் களாகத்தான் இருப்பார் என்பது என் கணிப்பு .
தாம்ப்ராஸ் என்ன தான் கத்தினாலும் , அவர்கள் சராசரி நிலைக்கு குறைவாக இல்லை . அவர்கள் ஒதுக்கீடு முறைகள் பற்றி பட்டுக் கொள்வது இல்லை - சோ முதலிய மேதாவிகள் தவிர்த்து -
சமூகத்திலே சலவை செய்பவர் , முடி திருத்துவோர் , முதலிய சாதியினர் , கிராமங்களில் , பழைய வருடத்துக்கு கொடுக்கும் முறை மானியங்கள் நின்று விட்டது ; என்றுமே நிலம் இருந்ததில்லை ; நகரத்துக்கு வந்தால் வருமானம் பரவாயில்லை ; ஆனால் குடியிருப்பு வசதி மிக மிக மோசம் ; சென்னையிலோ , மும்பாயிலோ எந்த ஒரு குடிசைப் பகுதிக்கு சென்றவர் கண்ணீர் விடுவர் . சொல்ல நா கூசுகிறது : உடல் உழைப்பு செய்தும் அவர்கள் பிச்சைக்காரர்களை விட எந்த விதத்திலும் வசதி ஒன்றும் அனுபவிக்கவில்லை ;
இந்த நிலைக்கு காரணம் பார்ப்பனர்களா அல்லது உயர்சாதியினரா என்று பட்டி மண்டபம் அனாவசியம் ( சில வலைப் பதிவுகள் ஆயிரம் ஹிட்டுகளைப் பெறும். ஆனால் ஒரு நலிந்தவர்க்கு ஒரு பயனும் இல்லை) . அறுபது ஆண்டுகளில் பல சாதியினரின் நிலை தாழ்ந்து விட்டது என்பதை உணர்ந்து , இப்போது எவ்வாறு மாற்றி அமைக்கலாம் என பார்ப்பனர் அல்லாத , மேல் சாதியினர் அல்லாத மண்டல் போன்ற ஒரு குழு ஆராய வேண்டும் .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment