http://adangatamizhan.blogspot.com/2010/09/blog-post_17.html
17 sep 2010
//உங்களது 95 வருட வாழ்க்கையில் 70 வருடம் பொது நலத்தோடு தொன்று ஆற்றியிருக்கிறீர்கள் 8,20,000 மைல்கள் சுற்றுபயணம் செய்திருக்கிறீர்கள்சுய சிந்தனையும், சுய மரியாதையும் இந்த தமிழினம் பெற வேண்டி, நீங்கள் ஆற்றிய அத்தனைச் சொற்பொழிவுகளையும் ஒலிப்பதிவு நாடவில்(cassette) பதிவு செய்திருந்தால் அது 2- ஆண்டுகள், 5- மாதங்கள், 11- நாள்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும்... ////பெரியரே இன்று பெண்கள் நிலை தெரியுமா? ////பெண்களுக்கு பிறக்க உரிமையிருக்கிறது (சில கிராமங்கள் தவிர்த்து) ஆனால் அவர்களின் வாழ்க்கை முடிவுகளை ஆண்கள் தான் முடிவு செய்கிறார்கள் இன்றும்;கண்டிப்பாக சுதந்திரம் உண்டு ஆனால் அது எவ்வளவு தூரம் என்பதை ஆண் தான் முடிவு செய்கிறான்////இன்றும் வரதட்சனை என்று தன்னையும், தன் மானத்தையும் விற்று பிளைக்கிறார்கள் மீசை முறுக்கி கொண்டே!//நீங்கள் இத்துணை பாடு பட்டபின்னும் தமிழக பெண்கள் நிலை இப்படி இருப்பது தாங்கள் கொடுத்த உழைப்புக்கு அவமானம். பகுத்தறிவு சிந்தனையாளர் ஆனதால் மறுபிறவியில் நம்பிக்கை இல்லை; இறைவனையும் இரைஞ்ச முடியாது. ஆனால் நம்பிக்கை வைத்து உள்ளோம் - மீண்டும் ஒரு பெரியார் தோன்றுவார், தங்கள் பணியைத்தொடருவார் என்று.
17 செப்டெம்ப்ர், 2010 10:50 am
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment