Tuesday, July 13, 2010

உலக மயானம் ஆக்கல்

http://vennirairavugal.blogspot.com/2010/07/blog-post_12.html

//உங்கள் சினம் புரிகிறது. அங்கு நிகழ்ந்த அவலங்களுக்கு அந்த ஆலையில் பணி புரிந்த உயர், நடு மட்ட அதிகாரிகள் மட்டுமல்லாமல், நிர்வாகம் நிச்சயமாகப் பொறுப்பு. அவர்கள் ஈடு செய்ய வேண்டும்.
என் குமுறல் வேறு ஒன்று: இங்கு நிறுவப்படும் ஆலைகளில் என்னென்ன காப்பு முறைகள் (safety measures) இருக்க வேண்டும் என விதி எழுதுவது அதிகாரிகள்; அவை கடைப் பிடிக்கப் படுகின்றனவா என சோதனை செய்ய வேண்டியது அதிகாரிகள்; அவர்கள் தம் பணியை சரியாகச் செய்தால் இது போன்ற நிகழ்வுகளை தவிர்க்கலாம்; அதாவது நாம் அரசியல் வாதிகளை காய்ச்சும் அளவுக்கு அதிகமாக காய்ச்சப் படவேண்டியவர்கள் அதிகாரிகள் (லஞ்சம் போன்ற காரணங்களால் செய்யும், செய்யத்தவறிய செயல்களுக்கு) தண்டிக்கப் படுவதில்லை.

“திராவிட கழகங்களிலையே உள்ள சண்டைகள் என்ன வகையில் சேர்த்தி?” க்கு;

http://rationalisterrorism.wordpress.com/2010/07/04/திராவிட-கழகங்களிலையே-உள்/#comment-89

நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் போர் மூழும் வேளையில் அவ்வையார்
"வெல்வதும் ஒரு கிள்ளி; தோற்பதும் ஒரு கிள்ளி; இந்தப் போர் கூடாது" என அறிவுறுத்தியதாக கேள்விப் பட்டிருக்கிறோம். இப்போதும் இது பெரியார் திராவிட கட்சியின் வலக் கரத்துக்கும், இடக்கரத்துக்கும் இடையில் தகராறு என்றால், அவ்வையின் சகோதரர், (வாழும் வள்ளுவர்) அவர்களின் இடையே சமரசம் செய்ய வேண்டியது தான்.

Monday, July 12, 2010

http://marubadiyumpookkum.wordpress.com/2010/07/03/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3/#comment-47

பதிவுக்கு அல்ல:
பெயர் சேகர்; அழகப்பா கலைக் கல்லூரி எழுபத்தி ஒன்று; தற்போது வங்கியில் உயர் அதிகாரி; கொல்கத்தா;
பள்ளிப் பருவத்தில் சோஷலிசம்/தமிழ் உணர்வு அதிகமாக இருந்த காலம். பணியாற்றியது முக்கால்
பங்கு தமிழ் நாட்டிற்கு வெளியே.
பணி ஓய்வு பெற்ற பின் சமூக நன்மைக்காக உழைக்க
வேண்டும் என அவா.
நல்ல நடுநிலைமையான முற்போக்கு எண்ணம் கொண்ட எழுத்துக்கள் பிடிக்கும்.
பதிவுகள் நிறைய இடவில்லை. ஒன்று நேரமின்மை: இரண்டு எழுத்து ஆற்றல் பெரிய அளவில் இல்லை; நல்ல பதிவுகளை காணும் போது கற்கிறோம். மேலும் மேலும் கற்க ஆசை. உங்கள் எண்ணங்கள் வரவேற்கப்படுகின்றன.

Friday, July 9, 2010

http://marubadiyumpookkum.wordpress.com/2010/07/03/%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%af%87-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a3/#comment-43

பதிவு ஆழ்ந்த மனத்திலிருந்து எழும் கனல் பொறிகளாய் தெறிக்கிறது.
பொதுக் கூட்டத்தின் போது திரண்ட மக்களைக் கண்டு தலைவர்கள் இதை வாக்குகளாய் மாற்றுவது எங்ஙனம் என சிந்திப்பர் என நான் கேட்டிருக்கிறேன்; வலைப் பதிவுகளைப் பார்க்கும் பொது, இவ்வளவு வலை தூண்கள் எய்தும் கணைகள் வாக்குகளாய் மாறி தீய ஆட்சியை மாற்றுமா என நினைக்க வைக்கிறது 9 july 2010

Wednesday, July 7, 2010

arasu pallikalil maanavarkal kuraikiraarkal

http://ilavasakkalvi.blogspot.com/2010/07/blog-post.html#comment-form

எழுபதுகளிலிருந்தே புதிய அரசு பள்ளிகள் திறக்காததினாலும் , வேலையின்மை காரணமாக வேறு மாநிலங்கள், வெளிநாடுகள் செல்லும் வழக்கம் துவங்கியதாலும் , மெட்ரிக் பள்ளிகள் அதிகமாக் உதயம் ஆகின.
அதே சமயம் 1960 முதலே பள்ளி/கல்லூரிகளில் அரசியல் அதாவது திராவிட கட்சிகளின் தாக்கம் அதிகம் ஆகியது. ஆசிரியர்களின் அரசியல் சார்பு, அதனால் அவர்களை தட்டி கேட்காத கல்வித்துறை அதிகாரிகள், தவிரவும் அகில இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் பரவிய லஞ்ச ஊழல் அரசுமுறை: இவை அனைத்தும் சேர்த்து உள்ள அரசுப் பள்ளிகள் சீரழியத் தொடங்கின. சென்னை, மதுரை முதலிய பெரிய ஊர்களில் அரசு பள்ளிகளில் ஆங்கில பயிற்று வழி கல்வி ஒரு பிரிவு(செக்ஷன்) என இருந்தது போய் மெட்ரிக் பள்ளிகளில் எல்லா வகுப்புகளிலும் ஆங்கிலமே பயிற்று வழி என ஆகியது. சிறிய ஊர்களில் இருந்து நகரம் நோக்கி மக்கள் குடி பெயர்ந்ததால் மக்கள் தொகை பெருகிய காலம்; புதிய அரசு பள்ளிகள் திறக்கப் படவில்லை. ஆகவே மெட்ரிக் பள்ளிகள் வந்தது காலத்தின் கட்டாயம்.
ஆரம்பக் கல்வி உதவி முதல் அமைச்சரின் கீழ் வர வேண்டும். ஸ்டாலின் ஒருவரே நிர்வாக சீர்கேடுகளை சரி செய்ய முடியும்.

Friday, July 2, 2010

pinnoottam 02/07/2010

http://inioru.com/?p=14594

தமிழகத்தில் பிளாட்டினப் படிமங்கள் புதிய ஆபத்து- மதி
சரி என்ன தான் செய்ய வேண்டும் என்கிறீர்கள்? ? தங்கத்தையும் விட விலை அதிகமான உலோகம் ப்லாடினம் இருக்கிறது என்று தெரிந்தவுடன் அதை தோண்டி எடுக்க வழி செய்ய வேண்டுமா? அல்லது காட்டுப் பகுதி, பழங்குடியினருக்கு வாழ்வாதாரம் என சும்மா இருக்க வேண்டுமா? நெய்வேலியில் கரி உள்ளது எனத் தெரிந்தவுடன் அதை தோண்டி எடுப்பதால் தானே மின்சாரம் உற்பத்தி செய்ய முடிகிறது.. இல்லை என்றால் தமிழ்நாட்டில் மின்சார வெட்டு இன்னும் அதிகமாக இருக்கும் இல்லையா?
கனிம வளங்கள் இருந்தால் ஒன்று மகிழ்ச்சி அடைய வேண்டும்; இரண்டு, அதை அங்கு வசிக்கும் பழங்குடி மற்றும் இதர மக்களுக்கு ஊறு விளைவிக்காமல் அவர்களை குடி பெயரச் செய்து கனிம செல்வத்தை தோண்டி எடுக்க வேண்டும்.
அமெரிக்கா, மேற்கு நாடுகள், சுரண்டல், பன்னாட்டு மோகம் என்று பேசுவது சரியா?