Saturday, August 7, 2010

pinnoottam 7 august 2010

http://meiyeluthu.blogspot.com/2009/11/blog-post_14.html

நீங்கள் சொன்ன செய்திகளில் பல அதிகம் கேள்விப்பட்டிராதவை. நன்றி.
ஆனால் ஒன்று: குர்ஆனில் 'ஜிஹாத்' குறித்து தீர்ந்த கருத்துக்கள் உள்ளன; வேற்று மத நபரைக் காயப் படுத்தினால் அது பாவம் அல்ல; இறைவனை (அல்லாவை) நம்பாமல் நரகத்துக்கு போகும் உயிரை காப்பாற்றி, அவர்களுக்கு அல்லாவின் உயர்வைப் போதித்து, அவர்கள் இஸ்லாமை ஏற்றுக்கொண்டு நல்லவர்களாக மாற்ற அவர்களை கத்தி முனையிலும் கொடுமைப் படுத்தலாம்; அது "ஹராம்" இல்லை என சொல்லி இருப்பதாக கேள்விப் பட்டிருக்கிறேன். அல்லாஉதீன், கஜினி போன்றோர் நிலைத்து ஆட்சி செய்யவில்லை; பாபர், அக்பர் காலங்களில் அரசு விரிவு படுத்தப் பட்டது; அவுரங்கசீப் காலத்தில் ஓரளவு கால் ஊன்றியவுடன், ஜிசியா இஸ்லாம் மதம் அல்லாதவர்கள் மீது வரி விதிக்கப் பட்டது. அவ்வரி செலுத்த முடியாதவர்கள் இஸ்லாமுக்கு மாறினார்கள்.
எனவே, முகலாயர் காலத்தில் மத மாற்றம் ஒரு குறிக்கோளாக இருந்தது என்பதை மறுக்க முடியாது.
உலகத்தில், நூற்றுக்கு மேற்பட்ட நாடுகள், அவற்றில் வாழ்வு முறைகள், மொழிகள், இனங்கள், அரசு முறைகள் முதலியன வெவ்வேறானவை; பொருளாதாரக் காரங்களுக்காக அவை ஒன்றை ஒன்று சார்ந்து இருத்தல் இன்றி அமையாதது என புரிதல் உள்ள கால கட்டத்தில், "ஜிஹாத்" என்று சொல்லிக் கொண்டு, இந்தியா வரும் லஷ்கர்-இ-தொய்பா, முதலியவை கால் ஊன்றியதையும், அவை பெற்று வரும் ஆதரவையும் பார்க்கும் போது ஐந்து நூற்றாண்டு காலத்துக்கு முன்னர், மன்னர்கள் படையெடுப்புக்கு மத மாற்றமும் ஒரு காரணம் என்றால் நம்பக்கூடியதே

Tuesday, August 3, 2010

3 aug 2010

http://vennirairavugal.blogspot.com/2010/08/blog-post.html
கபிலன் சொல்வது தான் சட்டப்படி உள்ள நிலை.
மதம் மாறியவர்களுக்கு ஒதுக்கீடு வேண்டும் என்றால் ஏன, எவ்வளவு, எந்த பிரிவின் கீழ் பதினைந்திலா, முப்பத்து ஏழிலா என்ற வினாக்களுக்கு விடையை சட்ட அவைகளிலும் பாராளுமன்றத்திலும் விவாதித்து சட்டத்திருத்தம் செய்ய வேண்டும். அது வரை கிறிஸ்துவர்களாக மாறியவர்கள் இந்துக்கள் என்று சொல்லிக்கொண்டே ஒதுக்கீட்டின் நன்மை பெற முடியும்; பெரும் அளவுக்கு செய்து கொண்டிருக்கின்றார்கள் என சொல்லப் படுகிறது.
உமா சங்கர் அவர்கள் ஒதுக்கீடு கேட்டுப் பெற்ற காலத்தில் இந்துவாகவே இருந்தார் என்றும் அவருக்கு சட்டப் படி ஒதுக்கீடு உண்டு என்றும் தான் பதிவுகள் கூறுகின்றன.