Sunday, February 13, 2011

14/02/2011

கபில் சிபல் இதைப் பற்றி இன்னும் பேசவில்லை. அவர் இதில் ஊழல் ஒன்றும் இல்லை, இதனால் அரசுக்கு லாபமே என்று ஏதேதோ புள்ளிவிவரங்கள் கொடுத்து உரக்க சொல்லிவிடுவார். மன்மோகன் சிங் ஊழல் துறை என்று துவங்கி, கபில் சிபலை அதற்கு அமைச்சராக ஆக்கலாம்.
என்று சொன்னாலே அவர் முஸ்லிம் ஆகிவிடுகிறார்; இரண்டாவது பகுதி அவரை சுன்னி ஆக்குவதற்கு. சரியா?
இந்த ஊர் அருகே தனியார் பள்ளி ஏன் எவரால் தொடங்கப் ப்பட்டது? ஓர் ஊரில் உள்ள பள்ளி(கல்) போதுமானதாக இல்லாதபட்சத்தில் தனியார் பள்ளி வருவது முறையே; உள்ள பள்ளிக்கே குறைந்த அளவில் மாணவர் உள்ள நிலையில் தனியார் பள்ளி ஏன் வந்தது?http://nkl4u.in/?p=9607&cpage=1#comment-198

Tuesday, January 11, 2011

12/01/2011

http://seasonsnidur.blogspot.com/2011/01/blog-post_7000.html

ஆமாம். இந்தியாவின் முதல் பிரச்னையே மக்கள் தொகை தான்.
அனைத்து சாதி, மதம் சார்ந்தவர்களும் குடும்பத்தின் அளவை சிறியதாக வைத்துக்கொண்டால், அரசு செய்ய முயலும் முன்னேற்ற பணிகளுக்கு, கட்டுமான வசதிகளை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு பயன்இருக்கும். ஷெட்யூல்ட் சாதியினர், பழங்குடியினர், முஸ்லீம்கள் மத்தியில் kuzhangdhaikal பிறப்பு சதவீதம் சராசரி நான்குக்கு மேல் உள்ளது. மற்ற பிரிவுகளுக்கு இது மூன்றை விட குறைவு. அதாவது ஒரு தம்பதிக்கு பிள்ளைகள் பெரும்பாலும் ஒன்று/இரண்டு/மூன்று (வருகின்ற மக்கள் தொகை புள்ளிவிவரம் என்ன சொல்லுமோ தெரியவில்லை). குடும்ப நல்வாழ்வு என்பது பொருளாதாரக் காரணங்களுக்காக திட்டமிடுதல் அவசியம்.

11.01.2011

http://thoppithoppi.blogspot.com/2011/01/blog-post_11.html

ஆம்வே சங்கிலியில் உள்ளவர்கள், தமக்கு என்ன ஆதாயம் என்றே யோசிப்பவர்கள்.
ஒரு முறை ஆம்வே ஏஜெண்டுகளின் கூட்டம் ஒன்றுக்கு போக நேர்ந்தது.
விநியோக சங்கிலியில் எப்படி சிக்கனம் செய்கிறார்கள்;அதனால் ஏஜெண்டுகளுக்கு எவ்வளவு வருமானம் என்று திரும்ப திரும்ப சொன்னார்கள். அதனால், பயன் படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் கிடைக்குமா என்று கேட்டேன்; பதில் இல்லை. வாய் அடைக்கப் பட்டேன்.
சோப்பு, பற்பசை போன்றவற்றில் இந்தியப் பொருள்களின் தரம் நன்றாகவே இருப்பதுடன், விலையும் (ஆம்வேயுடன் ஒப்பிட்டுப் பார்க்குங்கால்), மலிவே. அப்படி இருக்கையில், ஆம்வே சரக்குகள் எப்படி விற்பனை ஆகின்றனவோ எனப் பலமுறை வியந்து இருக்கிறேன். . பதிவர் சொன்னது போல் மூளைச் சலவை தான் போலும்.

11/01/2011

http://ww5.4tamilmedia.com/index.php/newses/india/2211-go-on-preference-for-tamil-medium-candidates-in-jobs-stayed
எந்த வேலைக்கு எடுக்கப் போகிறார்களோ, அந்த வேலைக்கு எந்த அளவுக்கு தமிழ் அறிவு வேண்டும் என்று நிர்ணயிக்கும் வண்ணம் வினாத்தாள்களும், நேர்முகமும் இருந்து விட்டால், ஆங்கிலம் பயிற்றுமொழியாகக் கொண்டு படித்தவர்கள் தேறமாட்டார்கள் அல்லவா? தமிழில் படித்தற்கு சிறப்பு ஒதுக்கீடு என்பது சட்டப்படி சரி ஆகாது என்று தோன்றுகிறது. ஆள் எடுக்கும் தேர்வுகள் தேவையான தகுதிகளை அளவிடும் வண்ணம் இருக்க வேண்டும்.

http://nallurmuzhakkam.wordpress.com/2011/01/10/blog-arrest/#comment-68
கிறிஸ்துவர்களும் இந்துக்களும் தம் மதத்தை விமர்சித்தவர்களை கொடுமைப் படுத்தினர் என்று சரித்திர அல்லது
புராண சான்றுகளை சொல்லி இருக்கிறீர்கள் . ஆனால் நாம் இருப்பது இந்த இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில்.
இரண்டு ஐயங்கள்: உங்கள் கூற்றுப் படியே, ஒரு காலத்தில் நடந்து கொண்ட கிறிஸ்துவர்களும், இந்துக்களும் இப்போது அதாவது சமீப காலத்தில், பல மத சமுதாயத்தில் வாழும் போது சகிப்புத்தன்மையுடன் வாழ்கின்றனர். ஆனால் இஸ்லாமியரிடையே அந்த மாற்றம் வர வில்லை.
இரண்டு: ராமாயணம் கதையா? அல்லது சரித்திரமா? சான்றாக எடுத்துக் கொண்டால் அதை சரித்திரம் என்றே கொள்கிறீர்கள் என்று தோன்றுகிறது. நன்றி.