Tuesday, January 11, 2011

11/01/2011

http://ww5.4tamilmedia.com/index.php/newses/india/2211-go-on-preference-for-tamil-medium-candidates-in-jobs-stayed
எந்த வேலைக்கு எடுக்கப் போகிறார்களோ, அந்த வேலைக்கு எந்த அளவுக்கு தமிழ் அறிவு வேண்டும் என்று நிர்ணயிக்கும் வண்ணம் வினாத்தாள்களும், நேர்முகமும் இருந்து விட்டால், ஆங்கிலம் பயிற்றுமொழியாகக் கொண்டு படித்தவர்கள் தேறமாட்டார்கள் அல்லவா? தமிழில் படித்தற்கு சிறப்பு ஒதுக்கீடு என்பது சட்டப்படி சரி ஆகாது என்று தோன்றுகிறது. ஆள் எடுக்கும் தேர்வுகள் தேவையான தகுதிகளை அளவிடும் வண்ணம் இருக்க வேண்டும்.

http://nallurmuzhakkam.wordpress.com/2011/01/10/blog-arrest/#comment-68
கிறிஸ்துவர்களும் இந்துக்களும் தம் மதத்தை விமர்சித்தவர்களை கொடுமைப் படுத்தினர் என்று சரித்திர அல்லது
புராண சான்றுகளை சொல்லி இருக்கிறீர்கள் . ஆனால் நாம் இருப்பது இந்த இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில்.
இரண்டு ஐயங்கள்: உங்கள் கூற்றுப் படியே, ஒரு காலத்தில் நடந்து கொண்ட கிறிஸ்துவர்களும், இந்துக்களும் இப்போது அதாவது சமீப காலத்தில், பல மத சமுதாயத்தில் வாழும் போது சகிப்புத்தன்மையுடன் வாழ்கின்றனர். ஆனால் இஸ்லாமியரிடையே அந்த மாற்றம் வர வில்லை.
இரண்டு: ராமாயணம் கதையா? அல்லது சரித்திரமா? சான்றாக எடுத்துக் கொண்டால் அதை சரித்திரம் என்றே கொள்கிறீர்கள் என்று தோன்றுகிறது. நன்றி.

1 comment:

  1. முற்றிலும் உண்மை . நல்ல மிக அருமையான கட்டுரைகள் கண்டு மிக்க மகிழ்வு .தொடரட்டும் உங்கள் தொண்டு .
    மக்கள் தன நிலை அறியட்டும் . சிந்திக்க வைக்க நீங்கள் செய்யும் தொண்டு சிறப்பு

    ReplyDelete